ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் |

ஹிந்தியில் ரன்வீர் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் துரந்தர். இப்படம் நான்கு வாரங்களில் 1100 கோடி வசூலித்துள்ளது. அதோடு, இந்தியாவை போலவே வட அமெரிக்காவிலும் இப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் அங்கு நான்காவது வார இறுதியில் 16 மில்லியன் வசூலித்திருக்கிறது. இதன் மூலம் அனிமல், ஜவான், ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல முக்கிய பிளாக்பஸ்டர் படங்களின் வட அமெரிக்க வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது.
இந்த நிலையில், டிசம்பர் 29ம் தேதி நிலவரப்படி துரந்தர் படம் வட அமெரிக்காவில் 16.3 மில்லியன் வசூலித்திருக்கிறது. இதனால் வட அமெரிக்காவில் 17.5 மில்லியன் வசூலித்திருந்த பதான் படத்தை விரைவில் முறியடிக்க உள்ளது. அதேபோல் ராஜமவுலி இயக்கிய பாகுபலி- 2 வட அமெரிக்காவில் 20.5 புள்ளி வசூலித்திருந்தது. அதனால் இன்னும் 4 மில்லியன் வசூலித்தால் பாகுபலி -2 வசூலையும் துரந்தர் முறியடித்து விடும். மேலும், வட அமெரிக்காவில் 18 மில்லியன் வசூலித்துள்ள கல்கி 2898 ஏடி படத்தையும் விரைவில் துரந்தர் படம் முறியடித்து சாதனை படைத்து விடும் என்பதும் தெரியவந்துள்ளது.