'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

பக்கத்து வீட்டுபெண் என்கிற அடையாளத்துடன் மளமளவென வளர்ந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷிற்கு சமீபத்திய படங்கள் எதுவும் சிறப்பாக அமையவில்லை. அவர் நடித்து முடித்துள்ள கருப்பர் நகரம், மோகன்தாஸ், உத்ரகாண்டா படங்கள் வெளிவரவில்லை. இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெற்றி மாறன் உதவியாளர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கும் 'அண்டர் 18' என்ற படத்தில் ஐஸ்வர்யா நடிக்கிறார். இந்த படத்தை எஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் ஜெகதீஸ் தயாரிக்கிறார். இதில் ஐஸ்வர்யா ஷோலோ ஹீரோயினாக நடிக்கிறார். விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். அண்டர் 18 என்ற தலைப்பை பார்க்கையில் இது 18 வயதுக்கு கீழ் உள்ள இளம் குற்றச் சிறார்கள் பற்றிய படமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “தமிழகத்தின் அறியப்படாத கிரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறோம். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது. செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.