ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளாக இருப்பவர்கள் இரண்டு மலையாள நடிகைகள். ஒருவர் மமிதா பைஜு, மற்றொருவர் அனஸ்வரா ராஜன். ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த படங்களில் தான் இவர்கள் இருவரும் தமிழில் கதாநாயகிகளாக அறிமுகமானார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
இன்று ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' படம் 2022ம் ஆண்டில் ஆரம்பமான ஒரு படம். படம் முடிந்து கால தாமதமாக வெளியாகிறது. அந்தப் படத்தில் தான் அனஸ்வரா முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அதற்கு முன்பு 2022ல் த்ரிஷா நடித்து வெளிவந்த 'ராங்கி' படத்தில் த்ரிஷாவின் உறவினராக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'டிராகன்' படம் மூலம் ரசிகர்களால் பேசப்பட்ட மமிதா பைஜு. 2024ம் ஆண்டில் வெளிவந்த 'பிரேமலு' மலையாளப் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானார். அதே வருடத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'ரெபெல்' படத்தில் தான் மமிதா கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாகப் போகாததால் மமிதா பெரிதும் பேசப்படவில்லை.
சினிமாவில் எப்போது யாருக்குப் பிரபலம் கிடைக்கும் என்பதைச் சொல்லவே முடியாது. அது மமிதா, அனஸ்வரா ஆகியோர் வரை தொடர்கிறது.




