கூலி படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு | போதை பொருள் வழக்கு : கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை | ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகை வரலட்சுமி | என்னது, மமிதா பைஜூ கேரக்டர் பெயர் இதுவா? | ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்தது : 100 நாள் சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் விஜய் | ‛குட் நைட்' பட இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் அளித்த பிறந்தநாள் பரிசு | மேலும் மூன்று மொழிகளில் வெளியான ஏஸ் | தக் லைப் - ஓடிடி ரிலீஸ் குறித்து, அன்று பாராட்டு, இன்று அபராதம் | தனுஷின் 5வது 100 கோடி படம் 'குபேரா' | அதிகபட்ச வியாபாரத்தில் 'கூலி' : மீண்டும் ரஜினியின் உச்சம் |
பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜூ. தமிழில் விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ஒரு படம், 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து வருகிறார். கீர்த்தீஸ்வரன் இயக்கும் டியூட் படம் பான் இந்தியன் படமாக உருவாகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதில் மமிதா கேரக்டர் பெயர் குரள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை மமிதா பைஜூ கூறுகையில் ''பல வெற்றி படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். எனது கதாபாத்திரப் பெயர் குரள். 'டியூட்' படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்'' என்கிறார்.
இப்படியொரு வித்தியாசமான பெயரை மமிதாவுக்கு ஏன் வைத்தார் என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிய வரும்.