2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கிட்டு இயக்கிய 'சல்லியர்கள்' படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பட ரிலீசுக்கு உதவவில்லை என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: ''ஈழம் குறித்து பல்வேறு படங்கள் வந்தாலும், அங்கே போர்களத்தில் பணியாற்றிய டாக்டர்கள், அந்த மருத்துவ அணி குறித்த ஒரு மனிதாபிமான கதை கொண்ட படம் சல்லியர்கள். போர்களத்தில் எதிரிகளை கூட டாக்டர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள், உயிரை எப்படி மதிக்கிறார்கள் என்ற கோணத்திலும் கதை நகர்கிறது. முறைப்படி சென்சார் வாங்கி ஜனவரி 1ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்தோம். ஆனால், தமிழகத்தில் வெறும் 27 தியேட்டர் மட்டுமே கிடைத்தது.
இந்த படத்துக்கு பலர் தியேட்டர் தரவில்லை. குறிப்பாக, பிவிஆர் குழுமம் ஒரு தியேட்டரை கூட ஒதுக்கவில்லை. இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவ வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சினிமா சங்கங்கள் பிளவு பட்டு கிடப்பதால் தயாரிப்பாளர்கள் தவிக்கிறோம். கோவையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்தபோது பழைய பிரச்னைக்காக படத்தை நிறுத்தினார்கள். பின்னர், பேசி பிரச்னையை முடித்தோம். தமிழ் படத்தை தமிழகத்தில் திரையிட தியேட்டர் கிடைப்பதில்லை.
ஆண்டுக்கு 12 பெரிய படங்கள்தான் வருகிறது. சின்ன, மிடில் பட்ஜெட் படங்கள்தான் தியேட்டரில் அதிகம் வருகின்றன. ஆனாலும், பல போராட்டங்கள். சின்ன படங்களுக்கு தொடர்ச்சியாக இதே நிலை,சினிமா சங்க பாலிடிக்ஸ் காரணமாக இப்படிப்பட்ட பல படங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால், சல்லியர்கள் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறோம்' என்றார்.