'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் 'கர' எனும் படத்தில் நடித்துள்ளார் . வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் மமிதா பைஜூ , கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் , ஜெயராம், சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30ந் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் முதல் காப்பியை இயக்குனர் தயார் செய்து தயாரிப்பாளரிடம் காட்டியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது என்றாலும் 3 மணி நேரம் நீளம் கொண்ட படமாக இருப்பதை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் விக்னேஷ் ராஜாவிடம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு விக்னேஷ் ராஜா சம்மதம் தெரிவித்து இரண்டரை மணி நேர படமாக தயார் செய்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.