Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : விஜயகாந்தை கேப்டன் ஆக்கியது 'கேப்டன் பிரபாகரன்' அல்ல

18 மார், 2026 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Flashback-It-wasnt-Captain-Prabhakaran-who-made-Vijayakanth-the-captain
Advertisement

விஜயகாந்தின் கேரியரில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த படம் 'கேப்டன் பிரபாகரன்'. இதனை ஆர்.கே.செல்வமணி இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகுதான் விஜயகாந்த் 'கேப்டன்' பட்டத்தை பெற்றார் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை.

இந்த படம் வெளிவருவதற்கு 3 வருடங்களுக்கு முன்பே வெளிவந்த படம் 'செந்தூரப்பூவே'. இந்த படத்தில் விஜயகாந்த் 'கேப்டன் சவுந்தர பாண்டியன்' என்ற ராணுவ அதிகாரியின் கேரக்டரில் நடித்திருந்தார். இளம் காதலர்களான ராம்கி, நிரோஷாவுக்கு உதவி செய்யும் கேரக்டரில் நடித்தார். தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை விஜயகாந்திற்கு வாங்கி கொடுத்த கேரக்டர் இது.

இதன்பிறகு விஜயகாந்த் நடித்த படங்களின் டைட்டில் கார்டுகளில் 'கேப்டன்' என்று அடைமொழி கொடுக்கப்படவில்லை என்றாலும் விஜயகாந்த் ரசிகர்கள் அவரை கேப்டன் என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். ரசிகர் மன்ற போஸ்டர்களில் கேப்டன் என்றே குறிப்பிட்டார்கள். 'கேப்டன் பிரபாகரன்' படம் வெளிவந்த பிறக கேப்டன் என்ற பட்டம் இன்னும் விரிவாகி நிலை பெற்றது.

'செந்தூரப்பூவே' படத்தை தேவராஜ் இயக்கினார். ராம்கி, நிரோஷா, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மனோஜ் கியான் இசை அமைத்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றி பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: 500 படங்களுக்கு மேல் நடித்து விட்டு காணாமல் போன நடிகர்பிளாஷ்பேக்: 500 படங்களுக்கு மேல் ... 'நூறு சாமி'யில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கை 'நூறு சாமி'யில் கரும்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap