மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தயாரிப்பாளர்-இயக்குநர்-இசையமைப்பாளர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை (மார்ச் 11) பெங்களூருவிலேயே நடைபெறவுள்ளன.
‛இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், ஜென்ம நட்சத்திரம், அதிசய மனிதன், விட்னஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளராக திகழ்ந்தார். மேலும், கமல்ஹாசன் நடித்த ‛சூரசம்ஹாரம்' திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் அவர் ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.