படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நவம்பர் 2வது வாரம் தொடங்கி விட்ட நிலையில், இந்த வாரம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு புதிய படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. அவை என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
டியூட்
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'டியூட்'. 100கோடி வசூலை வாரிக்குவித்த இந்த திரைப்படத்தில், நடிகை மமிதா பைஜூ நடித்து இருந்தார். இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த திரைப்படம் நாளை(நவ.14ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இன்ஸ்பெக்ஷன் பங்களா (inspection bungalow)
மலையாளத்தில் த்ரில்லர் கதையுடன் வெளிவந்த வெப்தொடர் "இன்ஸ்பெக்ஷன் பங்களா'(inspection bungalow). தீய சக்திகள் நிறைந்த காவல்நிலையத்தில் செல்லும் போலீஸ் அதிகாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, அதை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வெப் தொடர் நாளை(நவ.14ம்தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
எக்கா(EKKA)
கன்னட மொழியில் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி வெளியான திரைப்படம் 'எக்கா(EKKA)'. இந்த திரைப்படம் இன்று(நவ.13ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹேப்பி மேரிட் லைப்(Happy Married Life)
இயக்குநர் பிரசாந்த் சீனிவாசன் இயக்கத்தில், கவுரி புனிதன், காய்த்ரி ரீமா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'ஹேப்பி மேரிட் லைப் (Happy Married Life)'. இந்த திரைப்படம் கடந்த 11ம் தேதி Shortfix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அவிஹிந்தம் (Avihintham)
மலையாளத்தில் வெளிவந்த காமெடி திரைப்படம் 'Avihintham'. இந்த திரைப்படம் தமிழ் உள்பட நான்கு மொழிகளில் நாளை(நவ.14ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பொய்யாமொழி (Poyyamozhi)
கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'பொய்யாமொழி(Poyyamozhi)'. த்ரில்லர் படமான இந்த திரைப்படம் நாளை(நவ.14ம் தேதி) சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
மருதம்
நடிகர் விதார்த் நடிப்பில், வெளிவந்த திரைப்படம் 'மருதம்'. வங்கியில் விவசாயிகளுக்கு நடக்கும் மோசடியை விளக்கும் விதமாகக் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இதில் எதார்த்தமான நடிப்பை அளித்து இருப்பார் நடிகர் விதார்த். இந்த படம் நாளை(நவ.14ம் தேதி) சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.