இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் இறங்கியபின் படங்களை குறைத்தார், அமைச்சர் ஆனபின் நடிக்கவில்லை. இப்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காண்பிக்கிறார். @லெனின் பாண்டியன்# என்ற படத்தில் கங்கை அமரன் ஜோடியாக மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார். விரைவில் அந்த படம் ரிலீஸ்.
இந்நிலையில், இன்னொரு தமிழ் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். தெருக்கூத்து பின்னணியில் வெளியாகி, பலரின் பாராட்டுகளை பெற்ற ஜமா படத்தை இயக்கிய பாரி இளவழகன் படம் அது. 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் பேமிலி' உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7வது தயாரிப்பாக மில்லியன்டாலர் நிறுவனம் தயாரிக்கிறது.
'ஜமா'வுக்குபின் பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 'மண்டேலா', 'மாவீரன்' படங்களுக்கு இசையமைத்த பரத் சங்கர் இசையமைக்கிறார். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் பேமிலி என்டர்டெயினராக படம் உருவாகிறதாம். கோடை விடுமுறைக்கு ரிலீஸ். ரோஜா என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது.




