மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

இயக்குனர் சமுத்திரக்கனி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சேர்த்து தற்போது பிசியான நடிகராக, மாறி மாறி நடித்து வருகிறார். இதனால் டைரக்ஷனுக்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்துவிட்டார் என்று சொல்லலாம். அதேசமயம் கடந்த 2021ல் தமிழில் தம்பி ராமையா நடிப்பில் வினோதய சித்தம் என்கிற படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற இந்த படத்தின் கதை பிடித்துப் போனதால் தெலுங்கில் நடிகர் பவன் கல்யாண் தன்னை வைத்து இந்த படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படி 2023ல் பவன் கல்யாண் மற்றும் சாய் துர்கா தேஜ் நடிப்பில் ப்ரோ என்கிற பெயரில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இந்த மூன்று வருட இடைவெளியில் இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்தையும் சமுத்திரக்கனி எழுதி முடித்து விட்டார். இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடி.. பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்கிறேன் என்று விரைவில் வெளியாக இருக்கும் தனது கார்மேனி செல்வம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த தகவலை கூறியுள்ளார் சமுத்திரக்கனி.