2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. இடையில் அரசியல் பக்கம் சென்றுவிட்டு அதைத் துறந்து மீண்டும் சினிமாவுக்கே வந்துவிட்டார். இப்போதும் அவருக்கென இருக்கும் ரசிகர் கூட்டம் அப்படியேதான் இருக்கிறது. அவர் படத்தின் பாடல் ஒன்றிற்கு 100 மில்லியன் பார்வைகள் யு டியூபில் கடந்து அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
அனில் ரவிப்புடி இயக்கத்தில், சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛மனசங்கர வரபிரசாத் காரு'. பீம்ஸ் செசிரோலியோ இசையமைப்பில் உருவான 'மீசாலா பில்லா' என்ற பாடல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான 75 நாட்களில் அந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இப்பாடல் வெளியான போது இளம் நடிகர்களைப் போல சிரஞ்சீவி, இப்படி நடனமாடி காதல் பாடலில் நடிப்பது குறித்த விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அவற்றைப் புறம் தள்ளி இந்தப் பாடல் இவ்வளவு வரவேற்பு பெற்றுள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. சங்கராந்தியை முன்னிட்டு படம் ரிலீஸாகிறது.




