போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகை சமந்தா, ராஜ் நிடிமொரு திருமணம் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. அவர்கள் இருவரும் தற்போது ஹனிமூனுக்காக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்ற பகுதிக்கு சென்றுள்ளார்கள். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை அங்கு தான் கொண்டாடப் போகிறார்கள்.
இந்நிலையில் அங்கு தாங்கள் சென்ற சுற்றுலா தலங்கள், ஓட்டல்களில் உணவருந்தும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. அதையடுத்து வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ள சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சமந்தா, ராஜ் நிடிமொரு இருவரும் இதற்கு முன்பு 'தி பேமிலி மேன்- 2, சிட்டாடல் ஹனி பன்னி' போன்ற வெப் தொடர்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்கள். அதோடு, நந்தினி ரெட்டி இயக்கும் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்திலும் தற்போது சமந்தா கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.