'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

சமீப காலமாக முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் ரீரிலீசாகி பெரிய அளவில் வசூலித்து வருகின்றன. அந்த வகையில், ரஜினி 75வது பிறந்த நாளில் அவர் நடித்த 'படையப்பா' மீண்டும் திரைக்கு வந்தது. அடுத்தபடியாக அவர் நடித்த 'மூன்று முகம்' வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் நடித்த 'அட்டகாசம்' ஏற்கனவே ரீரிலீஸ் ஆன நிலையில், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த 'மங்காத்தா' படம் விரைவில் ரீரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை அப்படத்தை வெளியிட்ட நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு 'காத்திருங்கள்' என்று அறிவித்துள்ளது.
அஜித்தின் 50வது படமான இந்த படம் 2011ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.