விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

மலையாள இயக்குனர் பிஜாய் நம்பியாரின் உதவியாளர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் படம் 'ஒன்ஸ்மோர்'. அர்ஜூன்தாஸ், அதிதி சங்கர், சோனா, பரிதாபங்கள் டிராவிட், ஜென்சன், ஜகாபர், அனுஷா நடிக்கிறார்கள். ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டூடியோ சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் கூறும்போது “இது 2016 மற்றும் 2024 காலகட்டங்களில் நடக்கும் காதல் கதை. கல்லூரியில் படிக்கும்போது இருந்த காதல் திருமண நேரத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை பெறுகிறது என்பதுதான் படத்தின் கதை, முந்தைய காலகட்டம் கேரளாவிலும், பிந்தைய காலகட்டம் சென்னையிலும் நடக்கிறது. பெரிய ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த அர்ஜூன் தாஸை முதன் முதலாக காதலுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். அதிதி ஷங்கரின் குடும்பமே கதையை கேட்டு ஓகே சொன்னது” என்றார்.




