போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மலையாள பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். நடிகைகள் நயன்தாரா,கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர் என ஏற்கனவே தகவல்கள் உள்ளது.
இப்படத்தை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கி வருகின்றனர். இப்படம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து கியாரா அத்வானி, ஹூமா குரேஷி ஆகியோரின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியானதை தொடர்ந்து இன்று டாக்சிக் படத்தில் நயன்தாரா 'கங்கா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும், 'பில்லா, ஆரம்பம், ஜவான்' போன்ற படங்களுக்கு பிறகு இப்படத்தில் நயன்தாரா ஸ்டைலான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் நயன்தாரா, யஷ்ஷின் அக்கா கதாபாத்திரத்தில் மற்றும் சற்று வில்லத்தனமான தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.