மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மார்ச் 19ம் தேதி வெளியாக இருந்த, யஷ் நடித்த 'டாக்சிக்' படம், ஈரான் போர் மற்றும் பல்வேறு காரணங்களால், ஜூன் 4ம் தேதி தள்ளிப்போகிறது. இதனால், அந்த தேதியில் ஏகப்பட்ட தியேட்டர்கள் காலியாகும் நிலை. இதை பயன்படுத்தி வேறு பெரிய படங்கள் வருமா என்று கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தால், தமிழகத்தில் தேர்வு சீசன் தொடங்கிவிட்டது. தேர்தல் வரப்போகிறது. டி20 கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதனால், தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை.
மார்ச் 19ம் தேதி டாக்சிக் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த படம் வராததால் வேறு பெரிய தமிழ் படம் வர வாய்ப்பில்லை. இப்போதைக்கு சூர்யாவின் 'கருப்பு' மட்டுமே சம்மரில் வரும் பெரிய படம். அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விக்னேஷ் சிவனின் 'எல்ஐகே' வரலாம். ரஜினியின் 'ஜெயிலர் 2' கூட ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகிறது.
விஜய் சேதுபதியின் 'டிரைன்' படமும் எப்போது ரிலீஸ் என தெரியவில்லை. இன்னும் சில சின்ன படங்கள் வரலாம். மற்றபடி, கோடையில் தியேட்டர்களும் காயப்போகிறது என்கிறார்கள். ஆகவே, 'தேவர்மகன், மவுனராகம், துள்ளாத மனமும் துள்ளும்' உட்பட பல படங்களை ரீ ரிலீஸ் செய்ய சிலர் தயாராகி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.