'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! |

1980ம் ஆண்டு வெளிவந்து இந்திய சினிமாவை உலுக்கிய படம் 'குர்பானி'. 'தி மாஸ்டர் டச்' என்ற ஜெர்மன் படத்தை தழுவி அன்றைய முன்னணி நடிகர் பெரோஸ்கான் இந்த படத்தை இயக்கி, தயாரித்து நடித்தார். அவருடன் அம்ஜத்கான், வினோத் கண்ணா, ஜீனத் அமன், அருணா இரானி உள்பட பலர் நடித்தனர். ஒரு திருடனுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான ஆடுபுலி ஆட்டம்தான் படம்.
கலர்புல்லான படப்பிடிப்பும், பரபரப்பான சண்டை காட்சிகளும், கல்யாண்ஜி, ஆனந்த்ஜியின் பாடல்களும் படத்தை பெரிய வெற்றி பெறவைத்தது. படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மொழிகளை தாண்டி முனுமுனுக்க வைத்தது. 'லை ஓ லைலா' பாடலும், அதற்கு ஜீனத் அமன் போட்ட ஆட்டமும் இப்போது பார்த்தாலும் கிரங்க வைக்கும் ரகம்.
இந்த படம் தமிழ்நாட்டில் வெளியாகி இங்கும் வசூலை குவித்து, சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் 100 நாட்களும் மற்ற தியேட்டர்களில் 50 நாளும் ஓடியது. படத்தின் காட்சிகளும், பாடல்களும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்ட நிலையில், ரீமேக் மன்னரான பாலாஜி தமிழில் இதனை ரீமேக் செய்தார்.
'விடுதலை' என்ற பெயரில் வெளியான இந்தப் படத்தில் அம்ஜத்கான் நடித்த போலீஸ் கேரக்டரில் சிவாஜியும், பெரோஸ்கான் நடித்த திருடன் வேடத்தில் ரஜினியும் நடித்தனர். இந்திப் பாட்டின் மெட்டை அப்படியோ போட்டு பாடல்களை கொடுத்தார், சந்திரபோஸ். ஆனால் பாடல்கள் இந்தி பாடல்கள் அளவிற்கு உயிர்ப்புடன் அமையவில்லை.
ஜீனத் அமன் அழகோடு மாதவியின் அழகை மக்கள் ஒப்பிட்டுக்கூட பார்க்கவில்லை. இந்தி 'குர்பானி' அந்தக் காலத்திலேயே தயாரிப்பாளருக்கு 25 கோடி லாபம் சம்பாதித்து கொடுத்தது. ஆனால் விடுதலை தமிழ்நாட்டில் தோல்வி அடைந்தது.




