பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! |

பிற்காலத்தில் 'எங்கேயோ கேட்ட குரல்' என்ற படத்தில் அம்பிகாவும், ராதாவும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தனர். இதேபோன்று 70 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 'காவேரி' என்ற படத்தில் சிவாஜி ஜோடியாக லலிதாவும், பத்மினியும் நடித்தனர்.
போர் தளபதியான சிவாஜியை நடன மங்கையான பத்மினியும், இளவரசி லலிதாவும் காதலிப்பதாக கதை. இறுதியில் பத்மினிக்காக, லலிதா காதலை விட்டுக் கொடுப்பார்.
இந்த படத்தை லேனா செட்டியார், கிருஷ்ணா பிக்சர்ஸ் மூலம் தயாரித்தார், ஜி.ராமநாதன், விஸ்வாநாதன், ராமமூர்த்தி இசை அமைத்தனர். டி.யோகானந்த் இயக்கினார்.
எம்.என். நம்பியார், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், இ.ஆர்.சகாதேவன், டி.இ. கிருஷ்ணமாச்சாரி, ராகினி, ஆர்.பாலசுப்ரமணியம், பி.எஸ்.வீரப்பா, டி.பாலசுப்ரமணியம், டி.கே. சம்பங்கி, குசலகுமாரி, ருஷ்யேந்திரமணி, எம்.சரோஜா, கே.எஸ். அங்கமுத்து, 'புலிமூட்டை' ராமசாமி, 'கொட்டப்புலி' ஜெயராமன், கரிகோல் ராஜு உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் தெலுங்கில் 'விஜயா கவுரி' என்ற பெயரில் ரீமேக் ஆனது.




