பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு |

தமிழ் இலக்கியத் துறையில் புகழ்பெற்ற எழுத்தாளர் லட்சுமி. இவரது பல நாவல்களை பலரும் திரைப்படமாக தயாரிக்க முன்வந்த போது அவர் மறுத்து வந்தார். எழுத்தில் கொண்டு வந்த உணர்வுகளை காட்சிகளில் கொண்டு வர முடியாது என்று கருதினார். என்றாலும் திரைப்படமாக வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதிய நாவல் 'காஞ்சனாவின் கனவு'.
இந்த நாவல் புகழ்பெற்ற வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்தது. இந்த நாவலை எழுதும்போது அவர் லலிதா பத்மினியை மனதில் வைத்து கேரக்டர்களை உருவாக்கி வந்தார். இந்த கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் வாசகர்களிடையே கேட்கும்போது அவர்களும் லலிதா, பத்மினி என்று சொன்னார்கள்.
பின்பு இந்த நாவலை எஸ்.எம் ஸ்ரீராமுலு நாயுடு திரைப்படமாக இயக்கி தயாரித்தார். லட்சுமி கேட்டுக் கொண்டபடியே லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார். அவர்களுடன் கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.சந்தான லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், எம்.என்.நம்பியார், டி.எஸ்.துரைராஜ், குமாரி தங்கம், பி.எஸ்.ஞானம், 'அப்பா' கே.துரை சுவாமி, என்.எஸ்.நாராயண பிள்ளை மற்றும் என்.கமலம் ஆகியோர் நடித்தார்கள். எஸ்எம் சுப்பையா நாயுடு இசையமைத்தார். இந்தப் படத்தில் கேஆர் ராமசாமி, லலிதா பத்மினி ஆகியோரின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.