காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

நடிகர் ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற தனியார் டிவி ஷோ மூலமாக பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியில் அவரை ஆர்யா திருமணம் செய்யவில்லை. அது ஒரு ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்று அனைவருக்கும் புரிந்தது. அடுத்து தேன், இறுகப்பற்று, ஜெயில், உடன்பால்(வெப்சீரியஸ்) படங்களில் அபர்ணதி நடித்தார். இப்போது 'வெஞ்சன்ஸ்' என்ற படத்தில் கதைநாயகியாக நடித்து வருகிறார். அடுத்த மாதம் படம் ரிலீஸ். ராகுல் அசோக் இயக்கியுள்ளார்.
இந்த படம் குறித்து பேசியுள்ள அபர்ணதி, ''நான் முதன்முறையாக கலெக்டராக, அதுவும் கதைநாயகியாக நடித்துள்ளேன். அரசியல் விஷயங்களை ஆழமாக கதை பேசுகிறது. ஜான் விஜய், ஒய்ஜி மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். நயன்தாரா நடித்த அறம் படத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும், எந்த கொள்கையையும் நாங்கள் சீண்டவில்லை.
எனக்கு ஆர்யாவுடன் நடிப்பதில் விருப்பம் இல்லை. அவருடன் அந்த ஷோவில் பல வாரங்கள் ஒன்றாக நடித்தது மனதில் பசுமையாக இருக்கிறது. அதை, ஒரு படத்தில் ஹீரோயினாக, வேறு கேரக்டரில் நடித்து அழிக்க விரும்பவில்லை. மற்றபடி ஆர்யாவுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை'' என்றார்.




