Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன்

13 மார், 2026 - 11:11 IST
எழுத்தின் அளவு:
Allu-Cinemas-Wall-of-Fame---Allu-Arjun-gave-space-to-Atlee
Advertisement


தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய குடும்பமான அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் ஹைதராபாத்தில் 'அல்லு சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை நேற்று திறந்தனர். அந்த தியேட்டருக்குள் 'வால் ஆப் பேம்' எனப்படும் 'புகழ் சுவர்' ஒன்று இடம் பெற்றுள்ளது. அதில் இந்தியத் திரையுலகத்தின் முக்கிய இயக்குனர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

அந்த சுவற்றில் தமிழ் இயக்குனரான அட்லி புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. தமிழ், ஹிந்தி என இதுவரையில் 5 கமர்ஷியல் படங்களை இயக்கியவர் அட்லி. தற்போது அல்லு அர்ஜுனின் 22வது படத்தை இயக்கி வருகிறார். ஐந்து படங்களை மட்டுமே இயக்கிய ஒரு கமர்ஷியல் இயக்குனரான அட்லிக்கு தங்களது சினிமா தியேட்டர் வளாகத்தில் இப்படி ஒரு முக்கியத்துவத்தை அல்லு அர்ஜுன் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அட்லியின் குருநாதரான ஷங்கர் படமும், தெலுங்கு, ஹிந்தியில் சில பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ராம் கோபால் வர்மா படமும் அதில் இடம் பெறவில்லை. தமிழ் இயக்குனர்களான மணிரத்னம், வெற்றிமாறன் ஆகியோரது படங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. 'எ லாஞ்ச்' என்ற இடத்தில் மறைந்த இயக்குனர்கள் கே விஸ்வனாத், கே பாலசந்தர், தாசரி நாராயண ராவ் ஆகியோரது படங்கள் மற்றும் சீனியர் இயக்குனர் கே ராகவேந்திர ராவ் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சில சீனியர் தெலுங்கு இயக்குனர்களின் படங்கள் அதில் ஏன் இடம் பெறவில்லை என தெலுங்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்த சர்ச்சையை அடுத்து அந்தப் புகைப்படங்களில் கூடுதலாக சிலரது படங்களைச் சேர்ப்பார்களா அல்லது எந்த மாற்றமும் இருக்காதா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம்மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் ... 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? 8 வார இடைவெளியில் ஓடிடி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap