'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

இந்தியத் திரையுலகத்தில் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களில் ஒன்றாக அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணி இணைந்துள்ள 'எஎ22 - எ6' படம் இருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றி சில அப்டேட்கள் படம் ஆரம்பமான போது வந்தன. அதன்பின் வேறு எந்தவிதமான அப்டேட்டும் அதிகம் வந்ததில்லை.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிடும் திட்டத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதை ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் வெளியிட உள்ளதாகவும் தகவல்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஒரு படத்தில் மட்டுமே தற்போது அல்லு அர்ஜுன் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகுதான் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். இன்னும் சில மாதங்களில் அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.
'எஎ22 - எ6' படம் அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகுதான் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.




