'ஜனநாயகன்' லீக் : நாயகி தெரிவித்த கண்டனம், நாயகன் விஜய் அமைதி ஏன்? | இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் | மாமியாருக்கு பாய் பிரண்டு தேடும் சமீரா ரெட்டி | ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? |

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம் 'ஜனநாயகன்'. தணிக்கை சான்றிதழ் விவகாரம் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இப்போது வரை படத்தின் தணிக்கை வேலைகள் முடிவடையவில்லை. அதனால் படம் எப்போது வெளியாகும் என்பதும் தெரியாமல் உள்ளது. பட வெளியீட்டுத் தேதி அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.
இதனால், படத்தை தியேட்டர் வினியோகத்திற்கு வாங்கியவர்களும், ஓடிடி உரிமைக்கு வாங்கிய நிறுவனமும் போட்ட முதலீட்டிற்கு இழப்பை சந்தித்து வருகின்றன. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தங்களது பணத்தைத் திருப்பிக் கேட்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது போல இப்படத்தின் ஓடிடி உரிமையை சுமார் 120 கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனமும் அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பட வெளியீட்டிற்கு முன்பாகவே மொத்த பணத்தையும் தந்துவிடுவார்கள். ஆனால், தற்போது வரை படம் எப்போது வரும் என்பதன் மர்மம் நீடித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை படம் வெளியாக வாய்ப்பில்லை. அதற்கான தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அறிவிப்பு வந்த பின்பு அது நடந்து முடிய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம். அதுவரையில் ஓடிடி நிறுவனம் காத்திருக்க விரும்பாமல்தான் ரத்து செய்திருக்கலாம் என்கிறார்கள்.