'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 3 என்ற படத்தை இயக்கி அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினி, அதன்பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை படத்தை அடுத்து ரஜினி முக்கிய வேடத்தில் நடித்த லால் சலாம் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் அடுத்தபடியாக தனது நான்காவது படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அவர்களது ஒன்பதாவது படமாகும்.
இந்த படத்திற்கு டெக்ஸ்லா என பெயரிட்டு, முதல் பார்வை வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இது குழந்தைகள் தொடர்பான படமாக இருக்கும் என தெரிகிறது. தமிழ் மட்டுமல்லாது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர்.

இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். மேலும், இதற்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய வை ராஜா வை படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீண்டும் அவர்களது கூட்டணி இணையப்போகிறது.




