மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

'கைதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி தொடர்ந்து 'மாஸ்டர், விக்ரம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் அர்ஜுன் தாஸ். 'அநீதி, போர், ரசவாதி, பாம்' ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கும் மலையாள நடிகை ஐஸ்வர்ய லெட்சுமிக்கும் காதல் என இதற்கு முன்பு கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அவரைக் காதலிக்கவில்லை, வேறொருவரைக் காதலிக்கிறார் என்றார்கள்.
இதனிடையே, இன்ஸ்டாகிராம் தளத்தில், “ஒருவரை நீங்கள் உயிராக நேசிக்கும்போது, அவரே உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால், அதிலிருந்து மீண்டு, வாழ்க்கையில் எப்படித்தான் முன்னோக்கிச் செல்வது?,” என்று பதிவிட்டுள்ளார்.
உடைந்த இதயத்தின் எமோஜியைப் பதிவிட்டுள்ளதால் அது காதல் பிரிவுதான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். யாரைக் காதலித்தார், யார் அவரது இதயத்தை உடைத்தது என்பது விரைவில் தெரிய வரலாம்.