திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

சேரன் இயக்கி, ஹீரோவாக நடித்த கிளாஸிக் சூப்பர் ஹிட் படம் 'ஆட்டோகிராப்'. 2004ல் வெளியான இந்த படத்தில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஆட்டோகிராப் மாதிரியான பல நினைவுகள் இருக்கும். இந்த படம் அப்படிப்பட்ட ஒரு கதையில் தான் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
கடந்த ஆண்டில் இந்த படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி ரீ ரிலீஸ் செய்தனர். ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆட்டோகிராப் படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டனர். அதற்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுபற்றி சேரன் வெளியிட்ட பதிவில், ‛‛அமேசானில் திரையிட தொடங்கிய குறுகிய காலத்தில் இதுவரை இந்தியாவில் மட்டும் 27 லட்சம் நிமிடங்கள் மக்களின் பார்வையில் ஆட்டோகிராப் பதிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி மக்களே'' என குறிப்பிட்டுள்ளார்.




