'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

இயக்குனர் ராஜூமுருகன் உதவியாளர் நவீன் இயக்கிய 'லிட்டில் விங்க்ஸ்' என்ற குறும்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் பெற்றது. இதை ட்ரீம் வாரியர் நிறுவனம் வெளியிடுகிறது.
காளிதாஸ், மணிமேகலை, ராம்ஜி நடித்துள்ளனர். உடல்நலக்குறைவால் வீட்டிலேயே இருக்கும் வயதானவரான காளிதாஸ் வீட்டில் வளர்க்கும் சேவலை கொன்று சமைத்து சாப்பிட ஆசைப்படுகிறார். அதை அவர் மனைவி தடுக்கிறார். காளிதாஸ் ஆசை நிறைவேறியதா என்பது கரு.
இது குறித்து இயக்குனர் பேசுகையில் கொரோனா காலத்தில் பல துர்மரணங்கள் நடந்தபோது இந்த கரு வந்தது. கந்தர்வன் எழுதிய 'சனிபிணம்' என்ற கதை, இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. என் இயக்குனர் ராஜூமுருகன் உற்சாகம் கொடுத்து அவரே இணைத்தயாரிப்பாளராக இருந்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் பிலோமின் எதையும் எதிர்பார்க்காமல் படத்தில் பணியாற்றினர். மணிமேகலை, காளிதாஸ் என இருவரும் செட்டிற்கு வரும் முன்பே நடிப்பு பயிற்சி அளித்திருந்தோம்.
லைவ் ரெக்கார்டிங் என்பதால் எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.
திருவண்ணாமலையில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்த காளிதாஸ் இப்போது உயிருடன் இல்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார். தன் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என அதிகம் நம்பியிருந்தார். இந்தப் படம் அவருக்கு அதை அமைத்துக்கொடுத்தது. கோவா, மும்பை என திரையிட்ட இடங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்காக தேசியவிருது அறிவிக்கப்பட்ட ஒளிப்பதிவாளர் சரவணமருதுவும் மறைந்துவிட்டார். வருகிற 27ம் தேதி இந்த குறும்படம் யுடியூபில் வெளியாகிறது'' என்றார்.