கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

விக்ரம் பிரபு நடித்த 'சிறை' படம் மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. வசூலிலும் நல்ல பலனை கொடுத்தது. படம் வெளியாகி 75 நாட்களுக்கு பிறகும் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு விக்ரம் பிரபு பேசியதாவது:
இந்த படம் எனது கேரியரில் முக்கியமான படம். நான் குறைவான படங்களில்தான் நடித்துள்ளேன். பெரிய குடும்பத்து பையன், சிவாஜி பேரன், பிரபு மகன் என்று என்னை விட்டு இயக்குனர்கள் ஒதுங்கினார்கள். எனக்கு பொருந்தாத கேரக்டர்களை விட்டு விலகினேன். இதனால்தான் குறைவான படங்களில் நடித்திருக்கிறேன். ஆனாலும் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
குடும்பத்திற்கே தெரியாமல்தான் 'கும்கி' படத்தில் நடித்தேன். எனது கதை தேர்வு, நடிப்பு எதிலும் குடும்பம் தலையிடுவதில்லை. ஆனாலும் குடும்ப பெருமை என்னை துரத்திக் கொண்டே இருக்கிறது. பள்ளியில் படிக்கும் காலத்தில் 'இவன் யார் தெரியுமா? இன்னார்' என்று ஒதுங்கினார்கள். இதனால் நாட்டை விட்டே ஓடி அமெரிக்காவில் படித்தேன்.
இயக்குனராகும் கனவுடன் திரும்பிய நான் நடிகன் ஆனேன். எந்த படமும் எனக்கு எளிதில் கிடைக்கவில்லை. எந்த படத்திலும் நான் எளிதாக நடிக்கவில்லை. 'டாணாக்காரன்' படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன். அதற்கு மாநில விருது கிடைத்தபோது மகிழ்ந்தேன். 'சிறை' வெற்றி என்னை மேலும் மகிழ வைத்துள்ளது. கடுமையாக உழைக்க வேண்டும், பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்பதை வழியாக கொண்டு பயணிக்கிறேன். என்றார்.