ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில், விக்ரம் பிரபு, அறிமுக நாயகன் எல்கே அக்ஷய்குமார், அறிமுக நாயகி அனிஷ்மா அனில்குமார் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2025ம் வருடம் டிசம்பர் 25ம் தேதி வெளியான படம் 'சிறை'.
விக்ரம் பிரபுவின் 25வது படமாக வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் படம், 30 கோடி வசூலைக் கடந்து இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்றுடன் இப்படம் வெளிவந்து 50 நாட்களாகிறது. இந்தக் காலத்தில் ஒரு படம் நான்கைந்து நாட்கள் தாக்குப் பிடித்து ஓடுவது பெரிய விஷயமாக உள்ளது. இரண்டாவது வாரம் போஸ்டர் அடிப்பது கூட சில படங்களுக்குத்தான் நடக்கிறது. சில படங்கள் மட்டுமே அபூர்வமாய் 25 நாட்களைக் கடக்கிறது. அப்படியிருக்கையில் இப்படம் 50 நாட்களைக் கடந்து ஓடுவது குறிப்பிட வேண்டிய ஒன்று.
சென்ற ஆண்டில் வெளியான சிறிய படங்களில் 'டூரிஸ்ட் பேமிலி, மாமன்,' உள்ளிட்ட சிறிய படங்கள் 50 நாள் போஸ்டரை வெளியிட்டன. அந்த வரிசையில் வருடக் கடைசியில் வெளிவந்த 'சிறை' படமும் சேர்ந்துள்ளது.