மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். அவர் நடித்துள்ள 'மேட் இன் கொரியா' படம் மார்ச் 12ல் வெளியாகிறது. சமீப காலமாக பிரியங்கா மோகன் மீது சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவரை மோசமாக சித்தரித்து அவதூறு பரப்பும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதற்கு பின்னணியில் ஒரு பி.ஆர் நிறுவனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, முன்பு இவர் ஒப்பந்தம் செய்திருந்த பி.ஆர் நிறுவனத்திடம் இருந்து விலகி வேறு பி.ஆர் நிறுவனத்தை நாடி சென்றதால், அவரை பழிவாங்கும் நோக்கில் அந்த பழைய பி.ஆர் நிறுவனம் பிரியங்கா மோகனை டார்கெட் செய்து நெகட்டிவ் பரப்புவதாக செய்திகள் வெளிவந்தன.
இது தொடர்பாக யுடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரியங்கா மோகன், ''உண்மை தான். நான் மட்டுமல்ல, சினிமாவில் உள்ள பலரும் இதுபோன்ற கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிறார்கள். என்னை மட்டும் சிலர் குறிப்பிட்டு தொடர்ந்து வலைதளங்களில் தாக்குகின்றனர். கடந்தகாலம் பற்றி பேச விரும்பவில்லை. சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். சில நேரங்களில் அது நம்மை பாதிக்கும். இதிலிருந்து தப்பித்து என்னை வளர்த்துக் கொள்ளும் வழியையே எப்போதும் தேடுகிறேன்'' என்றார்.