மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

திரிஷா விவகாரத்தில் விடியலாக முழு வீடியோவே வெளியே வரும் என்று கூறி நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் திடீர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருக்கிறார். இதற்கான மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கும் விஜய், தம்மை வீட்டில் சேர்க்க மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த குற்றச்சாட்டும், விவாகரத்து மனுவும் பெரியளவில் பேசப்பட, இந்த விவகாரத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தவெக மகளிர் தின விழா நிகழ்ச்சியில் விஜய் தெரிவித்துவிட்டார்.
அதே நேரத்தில் திரிஷாவுடன் ஜோடியாக விஜய்யும் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
திரிஷா, விஜய் விவகாரம் ஒரு திசையில் பயணிக்க, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், குந்தவை திரிஷாவை வீட்டுக்குள்ளே வைத்திருப்பது நல்லது கூறி இருந்தார். அவரின் பேச்சை கண்டித்து திரிஷா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட, அதன் பின்னர் சுடச்சுட பார்த்திபன் வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பார்த்திபன் மீண்டும் எக்ஸ் வலை தள பக்கத்தில் காணொளியுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது; கோடிட்ட இடங்களை நீங்கள் நிரப்புவதற்குள்..... விடியலாக முழு வீடியோவே வரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் 3 sha என்ற பெயர் வைத்து தான் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.
வெறும் 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் திரிஷாவை பாராட்ட வேண்டும் என்று நினைத்த இந்த நேரத்தில் என்று கூறி தொடங்குகிறார். அதன் பின்னர் அவர் என்ன பேசுகிறார் என்பதை யாரும் அறிந்து கொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் சஸ்பென்ஸ் தரும் விதமாக வசனங்களின் ஒலியை ஊமையாக்கி ஆங்காங்கே எடிட் செய்து புரோமோ ஸ்டைலில் பேசி இருக்கிறார் பார்த்திபன்.
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் வைரலாகி இருக்கிறது. திரிஷாவை பற்றி ஏதோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அது என்னவாக இருக்கும் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கவே இப்படி வீடியோ வெளியிட்டு உள்ளார் என்று கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.