மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

இந்திய சினிமாவில் இருந்து உலக மேடைக்கு சென்று சாதனை படைத்த நடிகைகளில் முக்கியமானவர் பிரியங்கா சோப்ரா. நடிகை, பாடகி, தயாரிப்பாளர், தொழில்முனைவோர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்த அவர், தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார். பின்னர் ஹாலிவுட்டிலும் தனது தடத்தை பதித்தார். இந்திய சினிமாவையும் ஹாலிவுட்டையும் இணைக்கும் பாலமாக பிரியங்கா சோப்ரா பார்க்கப்படுகிறார். இந்த நிலையில் 98வது ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.