Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்'

16 மார், 2026 - 10:39 IST
எழுத்தின் அளவு:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' படம் 6 விருதுகளை வென்றது. 'அவதார் : பயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும். அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. விருது வழங்கும் விழாவில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

​அதிக விருதுகள்
பால் தாமஸ் ஆண்டர்சனின் 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட மொத்தம் 6 விருதுகளைக் குவித்து முதலிடம் பிடித்தது.

முதல் பெண்
சின்னர்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆட்டம் டூரால்ட் அர்காபாவ், ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விருதுகள் விபரம்...
சிறந்த சர்வதேசத் திரைப்படம் : சென்டிமென்டர் வேல்யூ (நார்வே)
​சிறந்த அனிமேஷன் படம் : கே பாப் டிமன் ஹன்டர்ஸ்
​சிறந்த அசல் திரைக்கதை : ரையன் கூக்லர் (சின்னர்ஸ்)
​சிறந்த தழுவல் திரைக்கதை : பால் தாமஸ் ஆண்டர்சன் (ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)
​சிறந்த பின்னணி இசை : லுட்விக் கோரன்சன் (சின்னர்ஸ்)
​சிறந்த பாடல் : "கோல்டன்" (கே பாப் டிமன் ஹன்டர்ஸ்)
சிறந்த படம் : ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்
சிறந்த இயக்குனர் : பால் தாமஸ் ஆண்டர்சன் (படம் : ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)
சிறந்த நடிகர் : மைக்கேல் பி.ஜோர்டான் (சின்னர்ஸ்)
சிறந்த நடிகை : ஜெஸ்ஸி பக்லி (ஹேம்னட்)
சிறந்த துணை நடிகர் : சீன் பென் (ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)
சிறந்த துணை நடிகை : ஏமி மேடிகன் (வெப்பன்ஸ்)
சிறந்த அனிமேஷன் குறும்படம் : தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்
சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : அவதார் : பயர் அண்ட் ஆஷ்' திரைப்படம்
சிறந்த ஒலி அமைப்பு : எப்1 திரைப்படம் வென்றது.

​இந்திய கலைஞர்களுக்கு அஞ்சலி
இந்த ஆண்டின் 'In Memoriam' பகுதியில் இந்தியத் திரையுலகின் ஜம்பவான்களான தர்மேந்திரா, மனோஜ் குமார், பி.சரோஜா தேவி மற்றும் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆஸ்கர் விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்கினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ?மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
17 மார், 2026 - 07:03 Report Abuse
Senthoora அதென்ன தீபிகா படுகோனேகும், பிரியங்கா சோப்ராவுக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கு அழைப்பு, அவர்களைவிட பல திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். அழைப்பு இல்லை, இந்த இரண்டு கேசும் நடிப்பில் ஸிரோ.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap