முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! |

2026ம் ஆண்டின் சினிமாவுக்கான ஒரு நெருக்கடி மிகுந்த மாதத்தில் இருக்கிறோம். மார்ச் மாதம் என்றாலே முழு ஆண்டுத் தேர்வுகளுக்கான மாதம். அதனால், தியேட்டர்கள் பக்கம் வந்து சினிமா பார்க்கும் ரசிகர்களின் ஆர்வம் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் இந்த ஆண்டில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மட்டும் குறையவேயில்லை.
மார்ச் 6ம் தேதி 9 படங்களும், கடந்த வாரம் ஓடிடியில் ஒரு படமும், மார்ச் 13ம் தேதி தியேட்டர்களில் 8 படங்களும் வெளியாகின. அவற்றுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 60ஐக் கடந்துவிட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அதுவரையில் வாராவாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. சினிமா பார்க்கும் ரசிகர்கள் அரசியல் கட்சிகளின் தொண்டர்களாகவும் இருப்பதால் அவர்கள் தீவிர தேர்தல் வேலைகளில் இருப்பார்கள். நடிகரான விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளதால் அவரது ரசிகர்களும் கூட தியேட்டர்கள் பக்கம் வர வாய்ப்பில்லை.
12 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான முழுஆண்டுத் தேர்வு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், இதர வகுப்புகளுக்கான தேர்வுகளையும் முன்கூட்டியே நடத்த வாய்ப்புள்ளது. அதனாலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பத்தினர் தியேட்டர்கள் பக்கம் வர மாட்டார்கள்.
அடுத்து மார்ச் 28 முதல் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. அதனால், இரவு நேரக் காட்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம் வர வாய்ப்பில்லை. எனவே, அடுத்த நான்கு வாரங்களுக்கு அதிகப் படங்கள் வருவது சந்தேகம்தான். இருந்தாலும் ஓரிரு நாட்கள் ஓடினாலே போதும் என நினைக்கும் படங்களை சிலர் வெளியிடு முன் வருவார்கள்.
இந்த வாரம் மார்ச் 19ம் தேதி 'யூத்' படத்தின் வெளியீட்டு அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. ஹிந்தியிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி 'துரந்தர் த ரிவெஞ்ச்' படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்ததால் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் முன்வரலாம்.
இருந்தாலும் வேறு சில சிறிய படங்களை திடீரென வெளியிடவும் வாய்ப்புகள் உள்ளது.