மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கடந்த 2013ல் விஜய், அமலாபால் நடிப்பில் தலைவா திரைப்படம் வெளியானது. விஜய் இயக்கியிருந்தார். அந்த சமயத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவதில் மிகப்பெரிய சிக்கலை சந்தித்தது. காரணம் அந்த படத்தில் தலைவா என்கிற டைட்டிலுக்கு கீழே டைம் டு லீட் என்கிற டேக்லைன் சேர்க்கப்பட்டிருந்தது. விஜய் அரசியலுக்கு வருவார் என சொல்லப்பட்டு வந்த அந்த சமயத்தில், ஆட்சியில் இருந்த தலைமையை இந்த வார்த்தைகள் கோபப்படுத்தியதாகவும் அதனாலையே இந்த படம் ரிலீஸில் மிகப்பெரிய சிக்கலை சந்தித்ததாகவும் சொல்லப்பட்டது. அதன்பிறகு விஜய்யும் அவரது தந்தையும் சமாதானப்படுத்தி இந்த படம் வெளியாக வழி செய்தனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் விஜய் இந்த டேக் லைன் குறித்து கூறும்போது, “நான் படத்தை உருவாக்கும்போது தலைவா என்று மட்டும் தான் டைட்டில் வைத்திருந்தேன் ஆனால் படத்தின் தயாரிப்பாளரான சந்திர பிரகாஷ் ஜெயின் தான், டைம் டு லீட் என்கிற வார்த்தைகளை சேர்த்தால் அது இந்த படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கும் என்று புரமோஷனுக்காக அதை சேர்த்தார். சொல்லப்போனால் இந்த படத்தை நான் ஒரு அரசியல் படமாகவே உருவாக்கவில்லை. அரசியலைப் போலவே ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவரை பற்றிய கதையாகத்தான் இதை நான் உருவாக்கி இருந்தேன்” என்று கூறியுள்ளார்.