அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதியவர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மை வேடத்தில் நடித்து, வெளியாகி உள்ள படம் ‛தாய் கிழவி'. சிங்கம்புலி, முனீஸ்காந்த், அருள்தாஸ், பாலசரவணன், இளவரசு, ரேச்சல் உள்ளிட்டோர் நடிப்பில் மதுரை பின்னணியில் கிராமத்து ஸ்டைலில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு முக்கிய சமூக விஷயத்தையும் இப்படம் பேசுகிறது. படம் வெளியானது முதலே நல்ல வசூலை பெற்று வந்தது. மூன்று நாளில் ரூ.22 கோடி வசூலித்த இப்படம் கடந்த 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தாண்டில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் தலைவர் தம்பி தலைமையில், வித் லவ் ஆகிய படங்களை தொடர்ந்து தாய் கிழவி படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை தந்த படமாக அமைந்துள்ளது.