ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நடிகர் சூர்யா முதல் முறையாக தெலுங்கில் நேரடி படம் ஒன்றில் நடிக்கிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டு சமீபத்தில் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதில் சூர்யா ஒரு குழந்தையை தனது முன் பக்கமாக உள்ள பேக்கில் வைத்து அணைத்தபடி இருப்பது போன்று அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த பலரும் இது கவின் நடித்த டாடா படத்தின் போஸ்டர் போன்று இருக்கிறதே இன்று கமெண்ட் அடித்து வந்தார்கள்.
இந்த நிலையில் இந்தப் படம் கடந்த 2007ல் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கங்காரு படத்தின் கதையை தழுவி உருவாகிறது என்கிற ஒரு செய்தியும் சோசியல் மீடியாவில் பரவியது. அதற்கு காரணம் அந்த படத்தில் பிரித்விராஜும் இதேபோன்று ஒரு குழந்தையை தன்னுடன் சேர்த்து இணைத்தபடி இருப்பது போல அந்த சமயத்தில் போஸ்டர் வெளியாகி இருந்தது.
அது மட்டுமல்ல தன் காதலியின் சகோதிரி மர்மமான முறையில் இறந்த பின்னர், அந்த குழந்தையை தானே வளர்த்தபடி அதன் தந்தை யார் என பிரித்விராஜ் தேடி கண்டுபிடிப்பதாக கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அந்த படத்திற்கும் சூர்யா படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இது இயக்குனர் வெங்கி அட்லூரியின் ஒரிஜினல் கதை என்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




