மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களான சந்தானமும், சூரியும் கதாநாயகர்களாக மாறி நடித்து வரும் தற்போதைய சூழலில் நடிகர் யோகி பாபு மட்டுமே முன்னணி காமெடியனாக வலம் வருகிறார். அவரும் கூட அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அதே சமயம் சந்தானம், சூரி போல கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என ஒதுங்கி விடாமல். தான் இப்போதும் ஒரு காமெடி நடிகர் தான் என்பதை பகிரங்கமாகவே ஒப்புக்கொள்கிறார் யோகி பாபு.
அந்த வகையில் சூரியின் படத்தில் தான் காமெடியனாக நடிக்க வேண்டும் என்றும் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் யோகி பாபு. நானும் சூரியும் ஒரே காலத்தில் கஷ்டப்பட்டு ஒன்றாக வளர்ந்தவர்கள். அவரது இந்த உயரம் எனக்கு பிரமிப்பை தருகிறது. அதேசமயம் என் உயரம் என்ன என்பது எனக்கு தெரியும். நான் இப்போதும் காமெடியன் தான்” என்று கூறியுள்ளார் யோகி பாபு.