மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ஹிந்தியில் ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் 'துரந்தர்'. 1300 கோடி வசூல் செய்த இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த ரன்வீர் சிங்குடன் நடித்த சாரா அர்ஜுன், மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படம் வருகிற மார்ச் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 7ம் தேதியான நாளை 11.01 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக இன்று படக்குழு அறிவித்திருக்கிறது. அதோடு இந்த படத்தின் டிரைலர் மார்ச் 7ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து, திட்டமிட்டபடி நாளை டிரைலர் வெளியாகிறது என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.