Advertisement

சிறப்புச்செய்திகள்

'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி

14 மார், 2026 - 05:46 IST
எழுத்தின் அளவு:
I-made-losses-from-the-films-I-produced-Vijay-Sethupathi-opens-up-for-the-first-time
Advertisement

விஜய்சேதுபதி நடித்த முதல் வெப்சீரிசான முத்து என்கிற காட்டான் வரும் மார்ச் 27ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. காக்காமுட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசிவி வசாயி படங்களை இயக்கிய மணிகண்டனும், பி.அஜித்குமாரும் இணைந்து இதை இயக்கி உள்ளனர். சமீபத்தில் வெளியான இதன் டிரைலரில் காட்டான் என்ற கேரக்டர் குறித்து சில விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் அந்த டிரைலரில் காண்பிக்கப்படுகிறது. முத்துவின் உண்மை முகமும், அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இதில் மிலிந்த் சோமன், சுதேவ்நாயர், மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

காட்டான் குறித்து விஜய் சேதுபதி கூறுகையில், “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்” என்கிறார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகும் இதை விஜய் சேதுபதி தயாரித்துள்ளார் தனது தயாரிப்பாளர் அனுபவம் குறித்து பேசியுள்ள விஜய்சேதுபதி, ''இதற்கு முன்பு நான் தயாரித்த படங்கள் எனக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தின. சங்குதேவன் படத்தால் எனக்கு 1.75 கோடி நஷ்டம், ஆரஞ்சுமிட்டாய், மேற்கு தொடர்ச்சி , ஜூங்கா படங்களும் எனக்கு நஷ்டமாகவே முடிந்தன. இருப்பினும் இந்த படங்கள் எனக்கு பிடித்தமானவை என்பதால் எந்த வருத்தமும் ஏற்படவில்லை. காட்டான் வெப்சீரிஸை தயாரிக்க ஹாட் ஸ்டார் நிறுவனம் நிதி வழங்கியுள்ளது'' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ்சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ... பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap