ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர்' இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' படம் மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், அப்படத்தின் பிரிமியர் காட்சிகள் உலகம் முழுவதும் மார்ச் 18ம் தேதியன்று ஒரு நாள் முன்னதாக நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவுகளும் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன.
தமிழகத்தில் கூட மார்ச் 18ம் தேதியன்று பிரிமியர் காட்சிகள் நடைபெற உள்ளது. அதன் ஒரிஜினல் ஹிந்திப் பதிப்பிற்கான முன்பதிவு ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பல தியேட்டர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சில தியேட்டர்களில் மொத்த டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரிமியர் காட்சிகளில் மட்டுமே இந்தப் படம் தற்போதைய தகவல்படி இந்தியாவில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாம். தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். தெலுங்கு மாநிலங்களை விட இரண்டு மடங்கு டிக்கெட்டுகள் இங்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அமெரிக்காவில் மட்டுமே முன்பதிவுத் தொகை 2 மில்லியன் யுஎஸ் டாலரை நெருங்குகிறது என்று தகவல். இந்த முன்பதிவின் மூலம் மட்டும் கிடைத்துள்ள வசூல் 25 கோடியை நெருங்குவதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.