மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கடார் 2 , பார்டர் 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து சன்னி தியோல் நடிப்பில் உருவாகி உள்ள படம் லாகூர் 1947. ப்ரீத்தி ஜிந்தா, ஷபனா ஆஸ்மி உள்ளிட்ட நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நடிகர் அமீர்கான் தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய காதாபத்திரத்திலும் நடித்துள்ளார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ளார். வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது..
அதே சமயம் லாகூர் என்பது பாகிஸ்தானில் உள்ள நகரம் என்பதால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் லாகூர் 1947 என்கிற டைட்டிலை வைத்தால் தேவையில்லாத சர்ச்சைகள் கிளம்பலாம் என முடிவு செய்த படக்குழுவினர் தற்போது இந்த படத்திற்கு பத்வாரா 1947 டைட்டில் வைத்துள்ளனர். பத்வாரா என்பது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.