மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை நிஷா. சிறு பட்ஜெட் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார். ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் செய்வார். 'நதிகள் நனைவதில்லை' உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடியுள்ள நிஷா, மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'முத்து என்கிற காட்டான்' வெப் தொடரில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி, வாட்ச் மெக்கானிக், யானை பாகன், ஆட்டோ டிரைவர், மும்பை தாதாவின் அடியாள் என பல பரிமாணங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஒன்றாக அவர் 'கண்மணி நடன குழு'விற்கு பாதுகாவலராகவும் நடித்துள்ளார். இந்த பகுதியில் அவர் நடன பெண்மணியான நிஷாவை காதலிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. வருகிற 27ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் இது வெளியாகிறது.