அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் மனிஷா ஜஸ்னானி. 'இருக்கு ஆனா இல்ல, வீர சிவாஜி, போங்கு' உள்ளிட்ட சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடைசியாக 'ரெட்பிளவர்' என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படம் 'மெஸன்ஜர்'. பி.வி.கே பிலிம் பேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரிக்கும் படம். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னி மாடம், யுத்த காண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் நடித்தவர். இவர்கள் தவிர பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ரமேஷ் இலங்காமணி இயக்கி உள்ளார். பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அபுபக்கர் இசை அமைத்துள்ளார்.
பேஸ்புக்கில் ‛மெஸன்ஜர்' மூலம் பழகிய ஒரு பெண் விபத்தில் இறந்துபோக அதே நினைவில் வாழும் ஹீரோவை மீண்டும் அதே 'மெஸன்ஜர்' மூலம் இறந்துபோன அந்த பெண் பேசுவது மாதிரியான சஸ்பென்ஸ், திரில்லர் கதை. படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.




