Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகனை நினைத்து பயமாக இருக்கிறது : கருணாஸ் மனைவி கண்ணீர்

14 மார், 2026 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Karunas-wife-is-in-tears,-worried-about-her-son
Advertisement

நடிகர் கருணாசும், அவரது இசை குழுவில் பாடி வந்த பாடகி கிரேசும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியரின் மகன் கென். 'இரட்டைசுழி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 'அசுரன்' படத்தின் தனுஷின் மகனாக நடித்து புகழ்பெற்றார். தற்போது அவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'யூத்' என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கிரேஸ் கலந்து கொண்டு பேசியது தற்போது வைரலாகி இருக்கிறது. மகனை நினைத்து பயமாக இருப்பதாக அவர் கண்ணீருடன் கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது: என் பையனுக்கு 'அசுரன்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது வெற்றிமாறன் என்னிடம் ஒரு விஷயம் கேட்டார். 'இந்தப் படத்தில் அவன் நடித்தால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் போகலாம். அதற்கு நீங்கள் ஒத்துக்கொண்டால் சொல்லுங்கள். ஆனால் இந்த படத்தில் நடித்தால் அவருக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கும்' என்று சொன்னார். நானும் சிறிது நேரம் யோசித்துப் பார்த்து ஓகே சொல்லிவிட்டேன்.

பிறகு நான் வெற்றிமாறனிடம் என் பையன் எப்படி நடிக்கிறான் என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு விஷயம் சொன்னார். 'எல்லாரும் நல்லா நடிக்கிறான் என்று சொல்லி அவனை ஏத்தி விடுறாங்க. ஆனால் தனுஷ் அவனை மகனாக பார்க்க ஆரம்பிச்சிட்டார். இவன் அவரை அப்பாவாக பார்க்க ஆரம்பிச்சிட்டான் என்றால் நல்ல விஷயம். தனுஷ் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. அவரிடம் எல்லா விஷயமும் கத்துக்கலாம். அவருடன் இருந்தால் நடிப்பு மட்டும் இல்லாமல் சினிமா பற்றி நிறைய கத்துக்குவான்' என்று சொன்னார்.

நான் இன்று இந்த மேடையில் வந்து இப்படி பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. என் மகன் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்றால் அதற்கு முக்கிய காரணம் வெற்றிமாறனும் தனுஷும் தான். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அதைவிட அம்மாவாக ரொம்ப பயமாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக வரும் என நம்புகிறேன். என் மகனை நம்பி தயாரிப்பாளர் கோடி கணக்கில் பணம் போட்டிருக்கிறார். அவருக்கு எந்த சிரமும் வந்திடக்கூடாது. எல்லோரும் இந்தப் படத்தை தியேட்டருக்கு போய் பார்த்து ஆதரவு கொடுங்கள்" என்று கண்கலங்கி பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த சத்யா மூவீஸ்பிளாஷ்பேக் : சிவாஜி படத்தை தயாரித்த ... விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை நிஷா விஜய்சேதுபதி ஜோடியாக கவர்ச்சி நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap