காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

சினிமா உலகில் காதல், கல்யாணம், பிரிவு, விவாகரத்து என்பது எப்போது யாருக்கு நடக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. திடீரென காதல் என்ற கிசுகிசு வரும், ரகசிய திருமணம் செய்து கொள்வார்கள். பின்னர் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று சொல்வார்கள், திடீரென ஒரு நாளில் விவாகரத்து மனு என்று செய்தி வரும்.
இதற்கு முன்பு இது போல பல முறை நடந்திருக்கிறது. கடந்த வருடங்களில் இப்படியான ஒரு செய்தியில் நடிகர் ரவி மோகன் அடிக்கடி இடம் பெற்று வந்தார். அவரும், பெண் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் 2024ம் ஆண்டு இருவரது பிரிவு செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் பாடகியும், தெரபிஸ்ட்டுமான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ரவிமோகன் திருமணம் செய்து கொள்ளாமலேயே இணைந்து வாழ்வதாக செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து இருவரும் சில பொது நிகழ்வுகளில் ஒன்றாகவே கலந்து கொண்டார்கள்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய், இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லண்டனில் வசித்த சங்கீதாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குத் திருணமாகி 26 ஆண்டுகள் ஆகிறது. 25 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விஜய், சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வந்தன. தனது படங்களின் நிகழ்வுகளுக்கு மனைவியுடன் வந்த விஜய், கடந்த சில படங்களின் நிகழ்வுகளுக்கு அவரை அழைத்து வந்ததில்லை. அதுவே, அவர்களது பிரிவை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் கடந்த வாரம் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரினார் அவரது மனைவி சங்கீதா. ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருக்கிறார் விஜய் என்றும் குற்றம் சாட்டினார். இதனிடையே, நேற்று திருமண நிகழ்வில் ஒரே காரில், ஒரே நிற ஆடையில் விஜய், த்ரிஷா இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்த சமூகத்திற்கு எதையோ சொல்ல முயற்சிக்கிறார் விஜய் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது.
நேற்று விஜய், த்ரிஷா திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அதே நாளில் ரவி மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பூஜையும் நடைபெற்றது. அதில் ரவி மோகன், கெனிஷா இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்டார்கள்.




