'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழில் 'போடா போடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும், நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்த பின் அங்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
இந்நிலையில் இயக்குனராகவும் மாறினார். ஆனால், அவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை தமிழில் இயக்கவில்லை, தெலுங்கில் இயக்கியுள்ளார். 'எஸ் சரஸ்வதி' என்ற அந்தப் படம் இன்று மார்ச் 6ம் தேதி வெளியானது. இப்படத்தை இன்று தெலுங்கில் மட்டும்தான் வெளியிடுகிறார்கள். பின்னர் தமிழில் டப்பிங் செய்து வெளியிடலாம் எனத் தெரிகிறது.
இப்படத்தில் வரலட்சுமி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரகாஷ் ராஜ், பிரியாமணி, ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை ரசிகர்களால் நிச்சயம் யூகிக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குனர் வரலட்சுமி.




