மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

இந்தியத் திரையுலகத்தில் கடந்த வாரம் விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா ஆகியோருக்கு நடந்த திருமணம் பல ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றது. உதய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டவர்கள் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு வைபவத்தை நடத்தினார்கள். அதில் தெலுங்குத் திரையுலகத்தில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.
ஆனால், ராஷ்மிகா அறிமுகமான கன்னடத் திரையுலகத்திலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. அது போல ஹிந்தித் திரையுலகத்திலிருந்தும் யாரும் வரவில்லை. இத்தனைக்கும் ராஷ்மிகா சில ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகத்திலிருந்து கார்த்தி, ராதிகா, சரத்குமார் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தெலுங்குத் திரையுலகத்திலும் பாலகிருஷ்ணா கலந்து கொள்ளவில்லை. மற்றும் சில இளம் நடிகர்கள் யாரும் போகவில்லை. பலருக்கும் பிஆர்ஓ மூலமாகத்தான் திருமண வரவேற்பு அழைப்பிதழ் போயுள்ளது. அதனால், சிலர் கலந்து கொள்வதைத் தவிர்த்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.