'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர குடும்பத்து வாரிசும் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியுமான நடிகர் அல்லு சிரிஷ், நயனிகா ரெட்டி திருமணம் மார்ச் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான கொண்டாட்டங்கள் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் தற்போது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் சுகுமார், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் இதில் சம்பந்தமே இல்லாத மலையாளத் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனரும் நடிகருமான பசில் ஜோசப் கலந்து கொண்டதுதான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் மற்றும் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பசில் ஜோசப் அந்த நிகழ்வுக்கு வருகை தந்த இயக்குனர் சுகுமார் மற்றும் அட்லீ ஆகியோருடனும் உரையாடியது பலரை புருவம் உயர்த்த உள்ள வைத்துள்ளது. ஒருவேளை அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் அடுத்த படத்தில் இவர் இணைந்து பணியாற்ற இருக்கிறாரா அல்லது அல்லு சிரிஷ் நடிக்கும் படத்தையே இவர் இயக்கப் போகிறாரா என்பது போன்ற யூகங்களையும் இவரது வருகை ரசிகர்களிடம் கிளப்பி விட்டுள்ளது..




